வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 6 ஜூலை 2017 (15:44 IST)

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ரஜினியின் செல்ஃபி வீடியோ!

அமெரிக்காவில் சென்றுள்ள ரஜினிகாந்த், சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது.


 
 
மும்பை தாராவி பகுதியில் நடந்த ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ரஜினியை தவிர ‘காலா’  படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிள்ள நிலையில், ரஜினி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.  இந்நிலையில், காலாவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகிற 10ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருப்பதாக செய்திகள்  வெளியாகியுள்ளது.
 
கடந்த வாரம் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் அங்கு எதேர்ச்சையாக செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார்.  அந்த வீடியோவில், காரை ஒருவர் ஓட்ட அருகில் அமர்ந்தவாறு, தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினிகாந்த் பேசிக் கொண்டே  செல்வது போல் உள்ளது. அந்த வீடியோவில், ஆன் செய்திருக்கிறதா என ரஜினிகாந்த் கேள்வி கேட்கிறார். இந்த வீடியோவை  ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
 
ஏற்கனவே ரஜினியின் சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது  குறிப்பிடத்தக்கது.