1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: திங்கள், 8 மே 2017 (11:41 IST)

சமூக வலைதளங்களில் பரவும் துல்கர் மகளின் போலி புகைப்படங்கள்

துல்கர் சல்மான் மகள் என்று சொல்லி சமூக வலைதளங்களில் போலியான புகைப்படங்கள் பரவி வருவதால், அவர்  குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 
மலையாள நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். அவருக்கு, கடந்த 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தத் தகவலை  மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் துல்கர். அன்றுதான் அவரின் ‘சிஐஏ’ படமும் ரிலீஸானதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தார்  துல்கர். 
 
இந்நிலையில், ‘இதுதான் துல்கர் சல்மான் மகளின் புகைப்படம்’ என்று ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்  வேறு வேறு குழந்தைகளின் புகைப்படங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இது துல்கர் குடும்பத்தாருக்குத் தெரியவர, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
“தயவுசெய்து போலியான குழந்தைகளின் புகைப்படங்களைப் பரப்பாதீர்கள். என் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள். முடிந்தவரை எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்” என ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் துல்கர்  சல்மான்.