1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (00:11 IST)

ரசிகர்களை மிரட்டும் 'ஸ்பைடர்' டிரைலர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



 
 
உளவுத்துறையில் பணிபுரியும் மகேஷ்பாபுவின் சாப்ட்வேர் யார் உதவி கேட்டாலும் தானாகவே சிஸ்டம் ஆன் ஆகி அவருக்கு தகவல் தெரிவிக்குமாம் போன்ற டெக்னாலஜியுடன் வழக்கம்போல் கம்பீரமாக களமிறங்கியுள்ளார் முருகதாஸ்
 
காதல், கோபம், செண்டிமெண்ட் என மகேஷ்பாபு தனது சகலவிதமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். மிகப்பெரிய பாறாங்கல் ஒன்று சாலையின் நடுவே உருண்டு வரும் காட்சி ஷங்கர் படத்திற்கு நிகரானது
 
ராகுல் ப்ரித்திசிங் காதல், எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம் ஆகியவையும் கேமிரா, எடிட்டிங் பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.