1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (20:36 IST)

வடசென்னையில் பைக் திருடும் சூரி

விஜய்சந்தர் இயக்கத்தில் விகரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தில் சூரி விக்ரமுடன் இணைந்து பைக் திருடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


 

 
வடசென்னையில் நடக்கும் பைக் திருட்டு சம்பவங்களை மையமாக கொண்டு விஜய்சந்தர் ஸ்கெட்ச் படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரம், தமன்னா, சூரி, மதுமிதா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு 90% முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
படத்தில் விக்ரம் வாகனங்களை திருடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி வாகனங்கள் இருக்கும் இடங்களை நோட்டமிட்டு விக்ரமிற்கு தகவல் கொடுப்பவர். இந்த படத்தில் மதுமிதா சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.