1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:44 IST)

சூரி ஹீரோ, நயன்தாரா ஹீரோயின் அதிர்ச்சியில் கோலிவுட்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்வு அழைப்படுகிறார்.  இந்நிலையில் சூரி ஹீரோ. நயன்தாரா ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் ஒப்பு கொண்டுள்ளார். ஆமாங்க, ஒரு அறிமுக இயக்குனர் ஒரு காமெடி ஸ்க்ரிப்டை நயன்தாராவிடம் சொல்ல, அது அவருக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சாம். அதில்  ஹீரோ சூரியாம்.


 
 
இப்போ கோலிவுட்டே மயங்கி நின்னு அதிர்ச்சியான விஷயம் இதுதான். உண்மையா? என்று இந்த படத்தை தயாரிக்க  போவதாக சொல்லப்பட்ட அந்த தயாரிப்பாளர் இந்த செய்தியை மறுக்கவும் இல்லை. ஆக, தொடக்க நிலையில் உள்ள இந்த  ப்ராஜக்ட் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் இது சூரிக்கு அதிர்ஷ்டம் தான்.
 
எந்தவொரு காமெடி நடிகரும் ஹீரோவாகும்போது ஹீரோயினாக முன்னணி ஹீரோயின்கள் அமைவதில்லை. ஏன் சந்தானம்,  சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்னவங்க எத்தனையோ பேர்? உண்மையிலேயெ சூரிக்கு அதிர்ஷ்டம் இருக்குங்கோ.