1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (19:54 IST)

சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் !

சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் !

பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மகன் சினிமாவில் பாப்பாடகராக அறிமுகமாகவுள்ளார். 
 
பிரபல நடிகர் சரத்குமார் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில்  அறிமுகமானார். அதன்பிறகு சூரியன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் முன்னனி நடிகராக உயர்ந்தார். பல நாட்டாமை, சூரியவம்சம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து சுப்ரீம் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
 
சில ஆண்டுகளுக்கு முன் அவர் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 
 
இந்நிலையில், அவரது மகள், வரலட்சுமி தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அவரது மகன்  ராகுல், ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு திரைப்படத்தில், பாப் பாடகராக அறிமுகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இதுகுறித்து சரத்குமார் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது;

என் மகன் ராகுல் சரதின் முதல் முயற்சி, அவனே எழுதி பாடியுள்ள முதல் "RAP Single" #RaSun நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். எதிர்பார்த்து காத்திருங்கள். வாழ்த்திடுங்கள்.

Introducing 'Rahhul Sarathkumar' (a.k.a) #RaSun on his debut Rap Single,written and sung by him #RaSunTakeOff