வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (23:27 IST)

சிம்புவின் வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை - சிம்புவின் தாயார் குற்றச்சாட்டு

நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, மாநாடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் அவரது தடை செய்துவருவதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு  இயக்கத்தில் மாநாடு படத்திலும், கெளதம் இயக்கும்  வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த  அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததாகத் தெரிகிறது. இப்படத்தின் விவரகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து,  நடிகர் சிம்புவின் தயார் உஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நடிகர் சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படங்களைத் தடை செய்ய முயற்சிக்கிறார்கள்….எங்களைக் கட்டப்பாஞ்சாயத்திற்கு அழைக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.