செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (22:10 IST)

இயக்குனர் பாலா விவாகரத்து… பேச்சுவார்த்தை நடத்திய மூத்த நடிகர்!

இயக்குனர் பாலா சமீபத்தில் தனது மனைவி முத்து மலரை விவாகரத்து செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் முன்னணி இயக்குநர் பாலா. இவர்   விக்ரம் நடிப்பில் சேது, பிதாமகன், சூர்யா நடிப்பில் நந்தா, ஆர்யா நடிப்பில் நான் கடவுள், விஷால் நடிப்பில் அவன் இவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்  கடந்த 2004 ஆம் ஆண்டு  முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இவர்களுக்கு  பிராதானா என்ற மகன் உள்ளார்.

17 ஆண்டுகாலம் இணைந்து இல்லறத்தில் பயணித்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரிவதாக அறிவித்தனர். குடும்ப நலக் கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றனர். இந்த தம்பதிகள் பிரிவதை அறிந்து இருவரையும் சமாதானம் செய்ய மூத்த நடிகரான சிவக்குமார் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லாத நிலையில் இப்போது விவாகரத்து செய்துள்ளனர்.
source valaipechu channel