வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (07:23 IST)

அஜித் சார் போல அத செய்யணும் ஆசையா இருக்கு… சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

நடிகர் அஜித்குமார் தன்னுடைய இருசக்கர வாகனக் குழுவோடு சுமார் 18 மாதங்கள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அவரின் பட வேலைகளால் இந்த சுற்றுப்பயணம் இடைவெளி இடைவெளி விட்டு நடக்கும் என தெரிகிறது. ஆனால் இப்போது பைக் சுற்றுலாவுக்கு பிரேக் விட்டுவிட்டு அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தன்னுடைய இந்த சுற்றுலாவில் இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரையும் அவர் இணைத்துக் கொண்டார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் அஜித் போல ஷூட்டிங் இல்லாத நாட்களில் அவரோடு இணைந்து பைக் சுற்றுலா செல்ல ஆசை உள்ளது எனக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.