1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (10:53 IST)

அர்த்த நாரீஸ்வரராகும் சிவகார்த்திகேயன்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் பிரமாண்டமாக தயாராகிறது. இசைக்கு அனிருத், ஒலிக்கு ரசூல் பூக்குட்டி, ஒளிக்கு பி.சி.ஸ்ரீராம், ஒப்பனைக்கு ஷான் பூட், சண்டைக்கு ஹாலிவுட் கலைஞர்கள் என்று அனைவருமே முன்வரிசை நட்சத்திரங்கள்.


 

இந்தப் படத்தில் ஆண், பெண் என்று இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அவரது திறமையை வெளிக்கொணரும் படமாக இது இருக்கும்.

ஆண் கதாபாத்திரத்தின் பெயர் 'ரெ' யிலும், பெண் கதாபாத்திரத்தின் பெயர் 'மோ' விலும் தொடங்குவதால் படத்துக்கு ரெமோ என்று பெயர் வைத்துள்ளனர்.

சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி. சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா படத்தை தயாரித்து வருகிறார்.