1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (17:46 IST)

ரஜினி, தனுஷுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!!

சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் 3 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.


 
 
திரையுலக நட்சத்திரங்கள் இப்பொழுது தங்களது ரசிகர்களுடன் டச்சில் இருப்பதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
 
சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். அவருக்கு இந்த நட்சத்திர அந்தஸ்து கிடைக்க முக்கியக் காரணம் வலைதளங்கள் தான். 
 
சிவகார்த்திகேயன் தற்போது 3 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார். நடிகர்களில் இதற்கு முன் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் மட்டுமே 3 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.