1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvvery Manickam (Murugan)
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (16:00 IST)

நடிகர்கள் முன்பு உட்கார வெட்கப்பட்ட சிவகார்த்திகேயன்..

‘நாடக நடிகர்கள் முன்பு உட்காரவே வெட்கமாக இருக்கிறது’ என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


 

 
சித்ராலயா கோபு எழுதி, இயக்கிய படம் ‘காசேதான் கடவுளடா’. இந்தப் படத்தைத் தழுவி, நாடகமாக நடத்தி வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். தேங்காய் சீனிவாசன் நடித்த கேரக்டரில் ஒய்.ஜி. நடிக்கிறார். இந்த நாடகத்தின் 100வது நாள் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
 
“இந்த நாடகத்தில் நடிக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்த நடிகர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருக்க வெட்கமாக இருக்கிறது. சினிமாவில் ரீடேக் கேட்டு நடிக்கும் வசதி இருக்கிறது. ஆனால், ஒரு டேக் கூட இல்லாமல் இரண்டரை மணி நேரம் நாடகத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. சினிமா நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக நாடகம் உள்ளது” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.