1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (11:42 IST)

சூப்பர்ஸ்டாரா.. அது நான் இல்லீங்க... தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்

தனக்கு பட்டம் எதுவும் தேவையில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் இசை மற்றும் டிரெய்லர் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
 
இந்த விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், டி.இமான், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என அழைத்தார். அதேபோல், இயக்குனர் பேரரசு பேசும் போது அவரை ‘மக்கள் ஸ்டார்’ என அழைத்தார்.
 
அதன் பின் பேசிய சிவகார்த்திகேயன் ‘நாம் யார் என நமக்கு தெரியும். நமக்கு பட்டமெல்லாம் எதுவும் வேண்டாம். சாதாரண நடிகராக மக்களை மகிழ்வித்தாலே போதும்’ என தெரிவித்தார்.