வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (07:23 IST)

வேறு ஒருவருடன் என்னை இணைத்து பேசுவதா? இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்: சிம்ரன்

நடிகை சிம்ரன் ஒரு பிரபல நடிகர் உடன் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இணைத்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் சிம்ரன் தயாரிக்க இருக்கும் திரைப்படத்தில் அந்த நடிகரை நடித்த சிம்ரன் அணுகியதாகவும் ஆனால் அந்த நடிகர் மறுத்து விட்டதாகவும் வதந்தி பரவி வருகிறது.

இந்த வதந்தியால் ஆவேசம் அடைந்துள்ள சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

 "சமூக வலைதளங்களில் என்னை பாதிக்கும் வகையில் பேசுவது மனவருத்தத்தை உண்டாக்குகிறது. திரையுலகில் இத்தனை காலமாக எந்தவிதமான வதந்திகளுக்கும் நான் பதில் சொல்லியதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளை கடந்து சென்று விடுவேன். ஆனால், தற்போது பரவி வரும் வதந்திகளால் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

நான் இதுவரை எந்த பெரிய நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டதே இல்லை. கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்தேன். இப்போது என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பல ஆண்டுகள் எனது பெயரை வதந்திகளுடன் இணைத்து பேசுவதை சகித்துக் கொண்டேன். ஆனால், சுயமரியாதை என்பது மிக முக்கியமானது.

‘Stop’ என்பது மிக சக்திவாய்ந்த வார்த்தை, அதை இப்போது பயன்படுத்துவது சரியான நேரம் என்று நினைக்கிறேன். வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். யாரும் நமக்காக நிற்க போவதில்லை. நாம்தான் நமக்காக குரல் கொடுக்க வேண்டும். என்னைப் பற்றி பரப்பப்படும் பொய் வதந்திகளுக்காக, அதை பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று சிம்ரன் கடுமையாகக் கூறியுள்ளார்.

Edited by Siva