திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (11:12 IST)

ஓவியாவுக்கு ஆதரவாக சிம்பு: டுவிட்டரில் அன்பை பரப்பினார்!

ஓவியாவுக்கு ஆதரவாக சிம்பு: டுவிட்டரில் அன்பை பரப்பினார்!

பிக் பாஸ் ஆரம்பித்தது முதல் நடிகை ஓவியாவுக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிக் பாஸ் வீட்டில் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு குறைந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மொத்த இடத்தையும் அவர் தான் பிடித்திருக்கிறார்.


 
 
யாரை பற்றியும் புறம் கூறாமல் இருத்தல், மனதில் பட்டதை அப்படியே பேசுதல், கோபம் வந்தால் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுதல், தைரியம், துணிச்சல் போன்ற குணத்தால் ரசிகர்களை தன் பக்கம் கட்டிப்போட்டிருக்கிறார் ஓவியா.
 
ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு ஆதரவாக யாரும் இல்லை. ஓவியாவை தனிப்படுத்தி அவரை பற்றியே அனைவரும் புறம் பேசுகின்றனர். கண்டமேனிக்கு அவரை திட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று வெளியான ஒரு புரோமோ வீடியோவில் ஓவியா அழுவது போல காண்பிக்கப்பட்டது.
 
இதனையடுத்து ஓவியாவின் ரசிகர் பட்டாளம் நேற்று இணையத்தில் கொந்தளித்து விட்டனர். SaveOviya என்ற ஹேஷ்டேக் மூலம் நேற்று டுவிட்டரில் கதற விட்டனர். டுவிட்டர் ட்ரெண்டிங்கிலும் இது நேற்று முதலிடம் பிடித்தது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்களும் ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

 
இந்நிலையில் பிரபல நடிகர் சிம்பு நேற்று ஓவியாவுக்கு ஆதரவாக டுவீட் செய்துள்ளார். அதில், ஒருவர் மற்றவர்களிலிருந்து வேறுபட்டிருந்தால் அவறை பற்றி குறை கூறுவதையும், கார்னர் செய்வதையும் விட்டுவிட்டு அவரை அவர் பாட்டுக்கு அவரது போக்கில் விட்டுவிட வேண்டும். #Disheartened #Oviya #SpreadLove என ஹேஷ்டேக் செய்து டுவீட் செய்துள்ளார்.