திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:35 IST)

சிம்பு குரலுக்கு தெலுங்கில் அதிகரிக்கும் டிமாண்ட்… லேட்டஸ்ட் அப்டேட்!

சிம்பு நடிக்கும் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை போலவே அவர் பாடும் பாடல்களும் ஹிட் ஆகி வருகின்றன.

நடிகர் சிம்பு, நடிப்பு மட்டும் இல்லாமல் பாடல் எழுதுதல் மற்றும் இசையமைத்து பாடுதல் என பன்முக திறமைக் கொண்டவர். தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியான வாரியர் திரைப்படத்தில் புல்லட் பாடலை பாடினார். இந்த பாடல் செம்ம ஹிட் ஆனது.

இதையடுத்து இப்போது அவர் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் பாடல் பாடியுள்ளார். 18 பேஜஸ் என்ற படத்தில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையில் ”டைம் இவ்வு பில்லா” என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.