1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:57 IST)

பயமாக இருக்கிறது.. நான் இங்கே இருக்கமாட்டேன் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு

நடிகர் சிம்பு சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து விலகியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடிகர் சிம்பு தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில், தன்னுடைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பிற விஷயங்களையும் பற்றியும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.
 
இந்நிலையில், பேஸ்புக்கில் கடைசியாக ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் “ எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், நேர்மறையாக யோசிப்பதே என் பலம். ஆனால், இன்றைய சமூக வலைத்தள பக்கங்களில் எதிர்மறையாக பேசுவதே அதிகமாகவும், ஆதிக்கம் செலுத்தியும் வருகிறது. எனவே, இதில் இருக்கவே நான் பயப்படுகிறேன். 
 
ஒரு பிரலத்திற்கு சமூகவலைத்தளம் என்பது முக்கியமே. ஆனால், நான் என் இதயத்தை தொடரவே விரும்புகிறேன். எனவே வெளியேறும் முன் உங்களிடம் கூற ஆசைப்படுவது இதுதான். எப்போதும் அன்பையே தேர்ந்தெடுங்கள். சுதந்திர தின வாழ்த்துக்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


 


அதைத் தொடர்ந்து அவரது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களை அவர் அழித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.