1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (09:27 IST)

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாமல் இருக்க சிம்புவும் ஒரு காரணமா?

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24 (நேற்று) ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதற்குக் காரணம் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் வாங்கி இருந்த கடனைக் கட்டாததுதான் என்று சொல்லப்படுகிறது.

துருவ நட்சத்திரம் ரிலீஸாகாமல் இருக்க நடிகர் சிம்புவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த கௌதம் மேனன் சிம்புவுக்கு சம்பளத்தில் இன்னும் மீதத்தொகை தரவேண்டியுள்ளதாம். அதனால் கடைசி நேரத்தில் சிம்புவும் தன்னுடைய சம்பளத்தைக் கேட்டு பிரச்சனை எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் கடைசி நேரத்தில் துருவநட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாகாமல் போக சிம்புவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.