1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (16:40 IST)

சிம்புவின் ‘மாநாடு’ குறித்த முக்கிய அறிவிப்பு: வெங்கட்பிரபு டுவீட்

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஈஸ்வரன் படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியானதை அடுத்து தற்போது அவர் ‘மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தவாரம் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம். இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தனது டுவிட்டரில் ஒரு டுவிட் பதிவு செய்துள்ளார்
 
இந்த டுவிட்டில் நாளை காலை 9.09 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் அப்டேட்டை எதிர்பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை காலை 9.09 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் என்பதும் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும், விறுவிறுப்பாக  இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது