ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2020 (15:38 IST)

இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் - கண்கலங்கி அழுத சிம்பு... !

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான சிம்பு கடந்த சில வருடங்களாகவே எந்த வெற்றிப்படங்களையும் கொடுக்காமல் ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் இருந்து வருகிறார். படங்கள் தான் சரியாக அமையவில்லை என்றால் திருமணம் சட்டு புட்டுன்னு நடக்கமாட்டேங்குது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். ஆனால் சிம்புவுடன் இருக்கும் அவரது நண்பர்களுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. 
 
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மஹத் மற்றும் பிராச்சியின் திருமணம் நடைபெற்றது அத்திருமணத்தில் அனிருத், சிம்பு, பிரேம்ஜி உள்ளிட்ட மஹத்தின் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.  இந்நிலையில் முதன் முறையாக தனது திருமணத்திற்கு மனைவி பிராச்சியுடன் பிரபல இணையதள சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். 
அதில் பேசிய மஹத், ஆரம்பத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாக தான் பழகினோம். பின்னர் எனக்காக  ஒரு நாள் சென்னை வந்தால் அப்போது அந்த காதல் பூத்தது. மேலும் எனது பெற்றோருக்கு பிராச்சியை மிகவும் பிடித்துவிட்டது. எங்களுக்கு நிறைய சண்டை.... நானே நிறைய தப்பு பண்ணியிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த காதல் திருமணம் வரை வந்து நல்ல படியாக முடிந்தது என கூறி கண்கலங்கினார். மேலும், சிம்பு தனக்கு திருமணம் ஆனதை நினைந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து மூன்று நாள் எனது திருமணத்தில் தான் இருந்தான். அவனுக்கும் ஒரு நல்ல பெண் கிடைத்து இதுபோன்று திருமணம் நடந்தால் நானும் ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துவேன் என கூறி புன்னகைத்தார்.