1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (17:38 IST)

சைலண்ட் மோடில் பைரவா ஆடியோ விழா...?

விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் பாடல்களை டிசம்பர் 17 -ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் உள்ளது. விஜய்யின் முந்தையப் படங்களான தெறி, புலி போலன்றி, விழா எதுவும் நடத்தப்படாமல் பைரவா பாடல்கள் வெளியிடப்பட உள்ளன என்ற தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

 
பைரவா படம் 2017 பொங்கலுக்கு வெளியாகிறது. டிசம்பர் 17 பாடல்களை வெளியிடுகின்றனர். சந்தோஷ் சிவன் பைரவாவுக்கு இசையமைத்துள்ளார்.
 
கபாலிக்கு இசையமைத்த சந்தோஷ் சிவன் முதல்முறையாக விஜய் படத்துக்கு இசையமைத்திருப்பதால் பைரவா பாடல்களுக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. பெரும் விழா எடுத்து பாடல்களை வெளியிடுவார்கள் என்று நினைத்தவேளையில் சைலண்டாக பாடல்களை வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வரின் திடீர் இறப்பு காரணமாகவே இப்படியொரு முடிவு எனவும் கூறப்படுகிறது.