1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (11:54 IST)

ஸ்ருதி ஹாசன், கௌதமி சண்டை?: பூனைக்குட்டி வெளியே வந்தது!

ஸ்ருதி ஹாசன், கௌதமி சண்டை?: பூனைக்குட்டி வெளியே வந்தது!

நடிகர் கமலின் மகள் ஸ்ருதி ஹாசனுக்கும், கமலுடன் தற்போது இணைந்து வாழும் கௌதமிக்கும் இடையே உரசல் இருந்து வருவதாக தகவல்கள் கசிந்தன. சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில் இருவரின் சண்டையை உறுதிபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.


 
 
கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கௌதமி தான் கமலின் காஸ்டியூம் டிசைனராக இருந்தார். அதேப்போல் கமல் தற்போது நடித்து வரும் சபாஷ் நாயுடு திரைப்படத்திற்கு கௌதமி மற்றும் ஸ்ருதி ஆகியோர் தான் காஸ்டியூம் டிசைனர்.
 
இங்குதான் கௌதமி, ஸ்ருதி இடையே மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் சபாஷ் நாயுடு காஸ்டியூம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். கௌதமி கொடுக்கும் காஸ்டியூம்களை ஸ்ருதி ஏதாவது குறை சொல்லி, தேவையின்றி நிராகரித்து வந்துள்ளார்.
 
இது குறித்து கமலிடம், கௌதமி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சபாஷ் நாயுடு படம் குறித்து சமூக வலைதளத்தில் அமெரிக்காவில் இருந்து ஸ்ருதி வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் கூட கௌதமி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், கௌதமியை அதன் பிறகு சந்தித்தீர்களா? என்று  நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஸ்ருதி ஹாசன், எனக்கு என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்கவே சிரமப்பட்டு நேரம்  ஒதுக்க வேண்டி உள்ளது, மற்றவர்களை பார்க்கத் தான் நேரமில்லை என கூறி தங்களுக்கிடையே உள்ள மோதலை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.