1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:26 IST)

தென்னிந்தியா என்ன வேற்றுகிரகமா? ஸ்ருதிஹாசன் ஆவேசம்

தென்னிந்தியா என்ன வேற்றுகிரகமா? என நடிகை சுருதிஹாசன் ஆவேசமாக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தென்னிந்தியா சென்ற போது நீங்கள் தென்னிந்தியாவிலிருந்து வருகிறீர்களா? ஹிந்தி பேசுவீர்களா? என்று தன்னிடம் ஒருவர் கேட்டதாகவும் தென்னிந்தியா என்றால் வேற்றுகிரகமா? நாம் எல்லோரும் படம் எடுக்கிறோம், எல்லோரும் கடுமையாக உழைக்கிறோம், பாரபட்சம் பார்ப்பதற்கு 2022ல் இடமில்லை என்று கோபத்துடன் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே வட இந்திய திரை உலகினர் தென்னிந்திய திரையுலகினர்களை மதிப்பதில்லை என்று கூறப்படும் நிலையில் சுருதிஹாசனின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது