ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் புகைப்படங்கள்!
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வரும் ஸ்ருதி, இப்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் சலார் படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்தார். தமிழில் அவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
ஆனாலும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் பிரவுன் நிற உடையணிந்து அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.