1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (07:45 IST)

சீரியல் நடிகைக்குள் முற்றிய சண்டை... சித்ராவின் கமெண்டால் கடுப்பானா ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

அந்தவகையில் அண்மையில் இன்ஸ்டாராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்றிற்கு அவரது ரசிகர்கள் "உங்களிடம் இருந்து கிளாமர் போஸை எதிர்பார்க்கிறேன்" என்று கூற அதற்கு சித்ரா, அது இங்கே நடக்காது. 2000ல் பிறந்தவர்கள் எதிர்பாருங்கள் என்று குறிப்பிட அவரை ஷிவானியை தான் சொல்றாங்க என கண்டுபுடித்துவிட்டனர். உடனே சித்ரா, "ஐயோ இப்படி ஓப்பனா சொல்லிட்டீங்களே அக்கா என நக்கலடித்து சிரித்து ஷிவானியை கும்பல் சேர்த்து கலாய்த்து தள்ளினார்.


இந்நிலையில் தற்ப்போது சித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல், " மற்றவர்களை பற்றி பேசும் முன் உன் முதுகை பார், என்னை பிடிக்கவில்லை என்றாலும் நீ என்னுடைய நடவடிக்கைகளை கவனித்தால் நீயும் என் ரசிகர் தான் என்று மோசமான வரத்தை கொண்டு கூறியுள்ளார். சும்மா இருந்த ரெண்டு பேரையும் சொறிஞ்சி விட்டுட்டு சண்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்ஸ். இது எங்க போயி முடியுமோ தெரியல...