1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (17:04 IST)

சிவாஜி கணேசனின் நினைவை போற்றி பாடல் வெளியிட்ட இயக்குநர் சேரன்! - வீடியோ

சிவாஜிகணேசனின் 16-வது ஆண்டு நினைவு நாளான இன்று அவரை போற்றும் விதமாக சிவாஜிகணேசனின் பாடல் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும், இயக்குநருமான சேரன். சினிமா திரையுலகில் நடிகர்களுக்கு ஒரு உதாரணமாக இன்றும் திகழ்பவர் செவாலியே சிவாஜி கணேசன். 

 
சினிமா உள்ளவரை அவரது பெயரும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. நடிகனாகும் ஆசையில் வரும் அனைத்து  நடிகர்களும் நடித்து காட்டும் ஒன்று சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரம்தான். அதில் அவர்  நடித்திருக்கும் விதம், பேசும் வசனம் என இன்றளவும் அனைவரையும் வியக்க வைக்கிறார் நடிகர் திலகம்.
 
திமுகவில் எம்.ஜி.ஆருக்கு முன்னதாக முக்கியத்துவம் பெற்ற நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன். அவர் முதலில் நடித்த  பராசக்தி படம் சமூக சீர்திருத்தக்கருத்துகளைப் எடுத்துரைப்பதாக அமைந்திருப்பதால், சமூகத்தில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.


 
 
சிவாஜி கணேசனின் நினைவை போற்றும் வகையில் சேரன் வெளியிட்டுள்ள பாடலின் துவக்கத்தில் சிவாஜி பேசும் வசனம் தற்போது தமிழகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இடித்துரைப்பது போல உள்ளது.