1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2017 (11:43 IST)

ரஞ்சித்திடம் எகிறிய ஷங்கர்: பின்னணி என்ன??

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கபாலி படத்தின் வெற்றியே காலா படத்தில் கூட்டணி அமைக்க முக்கிய காரணம் என்பது தெரிந்ததே.


 
 
இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதல் காலா படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வரலாகி வருகிறது. இது படத்திற்கு நல்ல வரவறேப்பை ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதுதே பெற்று தருகிறது.
 
அதே வேலையில் ரஜினி நடித்து முடித்த 2.O படத்தின் புகைப்படம் இணையதளத்தில் கசிந்தது. ஆனால், அதனை சீண்டுவதற்கு கூட ஆள் இல்லை. இதனால் படத்தின் இயக்குனரான ஷங்கர் பயங்கர கடுப்பில் உள்ளாராம். இத்தனை பெரிய பட்ஜெட்டில் படமெடுத்தும் அதன் புகைப்படம் கூட டிரெண்டாவில்லையே என்பது ஷங்கரின் ஆதங்கமாம்.
 
எனவே, ஷங்கர் ரஞ்சித்திடம் 2.O படம் வெளியாகும் வரை காலா படத்தின் பப்ளிசிட்டியை குறைத்துகொள்ளுமாறு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.