1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (09:13 IST)

விக்ரம் படம் எப்படி இருக்கு?... இயக்குனர் ஷங்கரின் கவனம் ஈர்த்த டிவீட்!

விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. இது சம்மந்தமாக நீதிமன்ற வழக்குகள் வரை சென்று பிரச்சனை இப்போது சுமூக நிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயை இதுவரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் ஷங்கர் பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் சாரை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. 360 டிகிரியும் வெடித்து சிதறும் நடிப்பு. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். இந்த டிவீட் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.