1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (15:20 IST)

அனிருத்தே வேண்டாம்… ரஹ்மான் பக்கமே திரும்பிய ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் இந்தி படத்துக்கு ரஹ்மானையே ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் ரண்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் ரீமேக் செய்ய உள்ளார்.

இந்த இரண்டு படங்களுக்கும் ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தியன் 2 படத்தில் அனிருத்தை ஒப்பந்தம் செய்த ஷங்கர் அவரின் அனுகுமுறைகள் பிடிக்காததால் மீண்டும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான ரஹ்மானையே இரண்டு படங்களுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளார்.