செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (09:02 IST)

ஐ படத்தில் வேலைபார்த்தவருக்கு கார் பரிசளித்த ஷங்கர்

ஐ படத்தின் ட்ரெய்லரே படத்துக்காக ஷங்கரும் மற்றவர்களும் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பார்கள் என்பதை சொல்லிவிடுகிறது. தன்னுடன் ஆரம்பம் முதலே ஐ -க்காக உழைத்த மேனேஜர் விமலுக்கு ஷங்கர் கார் பரிசளித்துள்ளார்.
காதல் படத்தின் வெற்றிக்காக பாலாஜி சக்திவேல், வெயிலுக்காக வசந்தபாலன், இம்சை அரசன் 23 -ஆம் புலிக்கேசிக்காக சிம்புதேவன் ஆகியோர் ஏற்கனவே ஷங்கரிடம் கார் பரிசாக பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஷங்கரின் தயாரிப்பில் படம் இயக்கி அது வெற்றி பெற்றதால் கார் பரிசாகப் பெற்றவர்கள். 
 
முதல்முறையாக படத்தில் பணியாற்றியதற்காக விமல்தான் கார் பரிசு பெறுகிறார்.