1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (09:10 IST)

ஷங்கர் இல்லாமல் நடக்கும் அவர் படங்களின் ஷூட்டிங்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் படம் என இரண்டும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்து வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுதான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது வாரிசு படம் ரிலிஸுக்கு தயாராகி வருவதால், ரிலீஸ் வரைக்கும் ஷங்கர் – ராம்சரண் படத்துக்கு பிரேக் விட்டுள்ளாராம் தில் ராஜு. இதனால் ஷங்கர் விருவிருப்பாக இந்தியன் 2 படத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் நடப்பதால் ஷங்கர், தான் இல்லாமலேயே சில காட்சிகளை தன்னுடைய இணை இயக்குனர்களை படமாக்க ஒத்துக்கொண்டுள்ளாராம். இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதுபோல ராம்சரண் படத்தின் பாடல் காட்சிகளை தான் இல்லாமலேயே நடன  இயக்குனரை படமாக்க சொல்லிவிட்டாராம்.