1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (12:18 IST)

ஷாங்காய் திரைப்பட விழாவில் ட்ரீம் வாரியரின் அருவி

ஷாங்காய் திரைப்பட விழாவில் ட்ரீம் வாரியரின் அருவி

ட்ரீம் வாரியர் நிறுவனம் சர்வதேச திரைப்பட விழாக்களை குறிவைத்து தயாரித்திருக்கும் படம், அருவி. 


 


அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படம் அனைவர் உள்ளங்களிலும் இடம்பிடித்துவிட்டது என்று ட்ரீம் வாரியர் நிறுவனர் பிரபு மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 
 
சர்வதேச திரைப்பட விழாக்களில் அருவி சிறப்பான இடத்தை பிடிக்கும் என கூறியிருப்பவர், தமிழகத்திலும் படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 
 
ட்ரீம் வாரியர் நிறுவனம்தான் நயன்தாரா நடித்த, மாயா படத்தை தயாரித்தது. தற்போது ராஜு முருகனின் ஜோக்கர் மற்றும் கார்த்தி நடித்துள்ள காஷ்மேரா படங்களை தயாரித்து வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்