1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (16:02 IST)

புதை மணலில் சிக்கிய ஷாரூக்கான் ; டிவி தொகுப்பாளரை புரட்டி எடுத்தார் (வீடியோ)

அரபு நாடான அபுதாபிக்கு சென்ற பாலிவுட் நடிகர்  ஷாருக்கான் அங்கு புதை மணலில் சிக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
அபுதாபியில் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரமீஸ் பி ஏலா, அப் பித் நார் என்ற ரியாலிட்டி ஷோ மிகவும் பிரபலம். பிரபலங்களை பயமுறுத்தி அவர்களின் கோபத்தை ஒளிபரப்பவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாராம்சம். இந்த நிகழ்ச்சியை எகிப்து நடிகர் ரமீஸ் கலால் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் அந்த நாட்டிற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சென்றிருந்தார். அவர் அங்கு பாலைவன பயணம் செல்ல முடிவு செய்திருந்தார். இதை அறிந்த ரமீஸ், தனது குழுவினருடன் அங்கு சென்றார். மேலும், செயற்கையாக ஒரு புதை மணலை அமைத்து, அதில் ஹாருக்கானை விழ வைப்பதுதான் திட்டம். அவரோடு நடிக்க ஒரு அவரது குழுவை சேர்ந்த பெண்ணும் தயாராக இருந்தார்.
 
எப்படியோ அவர்களின் திட்டத்தில் சிக்கினார் ஷாருக்கான். குழிக்குள் அந்த பெண்ணும், ஷாருக்கானும் தவிக்க, தொகுப்பாளர் ரமீஸ் கலால், ஒரு ராட்சத பல்லி போல் வேடம் அணிந்து அங்கு வந்து அவர்களை பயமுறுத்தினார்.  சிறிது நேரம் கழித்து பல்லி உருவத்தை களைந்து, ஹாய் ஷாருக்கான் இது டிவி ஷோ என கூற கோபத்தின் உச்சிக்கே சென்றார் ஷாருக்கான்.
 
மேலும், அவரை மணலில் தர தரவென இழுத்து சென்று, அடிக்கவும் பாய்ந்தார். நான் உங்கள் ரசிகன், உங்களை நேசிக்கிறேன்.. என நமீஸ் கலால் எவ்வளவு கெஞ்சியும் ஷாருக்கானின் கோபம் தணியவில்லை.  அதன் பின் ஒரு வழியாக மனம் இறங்கி அவரை மன்னித்தார் ஷாருக்கான். இந்த நிகழ்ச்சி அந்த தொலைக்காட்சில் பெரிய ஹிட் அடித்திருக்கிறது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...