1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : திங்கள், 5 ஜூன் 2017 (15:57 IST)

நிகழ்ச்சி தொகுப்பாளரை கீழே தள்ளி முகத்தில் குத்து விட முயன்ற ஷாருக்கான்-வீடியோ

தன்னிடம் விளையாட முயன்ற நிகழ்ச்சி தொகுப்பாளரை கீழே தள்ளி முகத்தில் குத்தி விட பார்த்த ஷாருக்கானால் பரபரப்பு ஏற்பட்டது.


 

துபாயில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிப்பதற்காக நடிகர் ஷாருக்கான் நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷானுடன் பாலைவனப் பகுதியில் சென்றார். அப்போது அவர்களின் கார் புதை மணலில் சிக்கியது. இந்த நிலையில் திடீரென கொமோடோ டிராகன் ஒன்று, ஷாருக்கான் மற்றும் நிசானை நோக்கி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளினி நிஷான் கூச்சலிட்டார்.



 

உடனடியாக ஷாருக்கான் மணலை அள்ளி டிராகன் மீது வீசினார். அப்போது டிராகனுகனுக்குள் இருந்து ரமீஸ் அன்டர்கிரவுண்ட் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரமீஸ் வெளியே வந்தார். இதனால் கோபம் கொண்ட ஷாருக், இது எல்லாம் ஒரு விளையாட்டா?, இதற்கு தான் நான் இந்தியாவில் இருந்து வந்தேன்? என்று கத்தினார். மணலில் இருந்து வெளியே வந்த ரமீஸை தரையில் தள்ளி முகத்தில் ஓங்கு குத்தப் பார்த்தார். சமாதானம் பேசிய ரமீஸ் பேச்சால் மீண்டும் கோபம் அதிகரிக்கவே, அவரை தரையில் தள்ள தரதரவென இழுத்துச் சென்றார். இந்த தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.