ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (08:15 IST)

தயவு செஞ்சு இந்தி படங்களையும் பாருங்க… வேண்டுகோள் வைத்த ஷாகித் கபூர்!

சமீபகாலமாக பாலிவுட் படங்கள் படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதில் பெரிய நடிகர்களின் படங்களும் அடக்கம். ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் ஆகியோரின் படங்களும் படுதோல்வியை சந்தித்தன.

இதற்குக் காரணம் பாலிவுட் படங்கள் தங்கள் மண்ணின் கதைகளை சொல்லாமல், ஹாலிவுட் படங்களைப் பார்த்து அதைப் போலவே படங்களை உருவாக்க நினைப்பதுதான் என சொல்லப்படுகிறது. ஆனால் பாலிவுட்டில் தென்னிந்திய படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. திரையரங்குகளில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சிகளில் கூட தென்னிந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தென்னிந்திய ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் “தென்னிந்திய மக்கள் இந்தி படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும்.  பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனதோடு தென்னிந்திய மொழி படங்களையும் ரசிக்கின்றனர்.  அதுபோல நீங்களும் இந்தி படங்களை ரசிக்க வேண்டும். நாங்களும் நல்ல படங்களை எடுக்கிறோம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.