வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:01 IST)

ஷாருக்கானின் அடுத்த 2 பிரமாண்ட படங்கள்! முக்கிய தகவல்

pathan -shah rukh khan
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான். இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் போன்றவை பாதுகாப்பு பணிகளுக்காக  நிறுத்தப்பட்டுள்ளது.

நயன் தாரா, தீபிகா படுகோன், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில். விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் வெளியான பின்னர் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜவான் படத்தின் பிஸ்னஸ் ரூ.1000 கோடிக்கு ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இப்படத்தை முடித்தவுடன் அடுத்து 2 மேகா புராஜெக்டுகளில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அறிவிப்புகள் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், இப்படங்கள் வரும் 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் என தெரிகிறது.

ஏற்கனவே இந்திப் படங்கள் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ஷாருக்கானின்  படங்கள் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.