நெகட்டிவ் ப்ரமோஷன் செம்மயா வொர்க் அவுட் ஆயிருக்கு… பதான் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?
ஷாருக் கானின் பதான் திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் படம் தேசபக்தி பற்றிய படம் என்பதால் ரிலீஸூக்கு பிறகு எதிர்ப்புக்குரல்கள் அடங்கியுள்ளன.
இந்நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் படம் பெற்றுள்ளது. தொடர்ந்து பாலிவுட் படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இந்த ஆண்டில் பதான் படத்தின் மூலம் ஷாருக் கான் வெற்றிக்கணக்கை தொடங்கிவைத்துள்ளார் என பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்துக்கு எதிரான கருத்துகளே நல்ல விளம்பரமாக அமைந்துள்ளன. இதுவரை எந்தவொரு இந்தி படமும் படைக்காத சாதனையை பதான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் சுமார் 60 கோடிகளும், வெளிநாடுகளில் சுமார் 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து முதல்நாளில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.