திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (14:42 IST)

ஷாருக்கானின் புதிய ஓடிடி தளம்: ஹாட்ஸ்டாருடன் ஒப்பந்தமா?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிகராக மட்டுமின்றி ஐபிஎல் அணியின் உரிமையாளர் உள்பட பல தொழில்களில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் புதிய ஓடிடி தளம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
 SRK+  என்ற பெயரில் ஆரம்பமாக உள்ள இந்த ஓடிடி தளம் ஹாட்ஸ்டார் மற்றும் டிஸ்னி உடன் இணைந்து செயல்படும் என்றும் இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த புதிய ஓடிடி தளத்தில் ஷாருக்கானின் படங்கள் மட்டுமின்றி தமிழ் உள்பட இந்தியாவில் இன்று பல இந்திய மொழிகளில் உள்ள படங்களும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் இந்த ஓடிடி இந்திய ஓடிடி தளத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ஹாட்ஸ்டார் மற்றும் டில்லியில் உள்ள திரைப்படங்களையும் ஷாருக்கானின் ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.