திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (08:13 IST)

ஜெயிலர் படம் பற்றிய ரசிகரின் கேள்விக்கு எமோஷனலாக பதிலளித்த ஷாருக் கான்!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஒரு ரசிகர் ‘ஜெயிலர் படம் பார்ப்பீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளித்த ஷாருக் கான் “கண்டிப்பாக நான் ஜெயிலர் பார்ப்பேன். நான் ரஜினி சாரை மிகவும் நேசிக்கிறேன். எங்கள் ஜவான் பட ஷூட்டிங்கின் போது எங்கள் செட்டுக்கு வந்து அவர் எங்களை ஆசிர்வதித்தார்” எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் நேற்று ரிலீஸாகி பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று நல்ல வசூலை முதல்நாளில் பெற்றுள்ளது. அண்ணாத்த தோல்விக்குப் பிறகு ரஜினியின் கம்பேக் படமாக அமைந்துள்ளது.