1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (15:05 IST)

நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: நடிகை சந்தியா பரபரப்பு பேட்டி!!

பாவனா போன்று தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாக காதல் பட நடிகை சந்தியா தெரிவித்துள்ளார். 


 
 
காதல் படம் மூலம் பிரபலம் ஆனவர் சந்தியா. ஆனால் தமிழ் திரையுலகில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. இதனால் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 
 
பாலியல் சில்மிஷத்திற்கு ஆளான பாவனா போன்று, எனக்கும் நடந்துள்ளது. சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். கூட்டமான இடங்களாக இருந்ததால் அது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சந்தியா. 
 
பாவனா தனக்கு நடந்த கொடுமை குறித்து துணிச்சலாக புகார் கொடுத்ததால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவரின் துணிச்சலை பார்த்து பிற நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர் என்று சந்தியா தெரிவித்தார்.