1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 17 ஜூன் 2017 (04:52 IST)

இந்த ஒரு தகுதி போதும்: ரஜினி தாராளமாக அரசியலுக்கு வரலாம்: செந்தில்

கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்து தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் செந்தில், ரஜினி நடித்த பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். ரஜினியும் செந்திலும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.



 


இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது செந்திலும் அவரது பாணியில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தீவிர ஆதரவாளரான செந்தில் சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, '"தமிழக அரசியலில் இப்போதிருக்கும் நிலைமை தொடர்ந்து நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினி அரசியலுக்கு வரட்டும். அதற்கு அவர் இந்தியர் என்பதே போதும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை நடத்துவதுதான் இப்போதைய தேவை. பதவிகளை சிலரே வைத்துக்கொள்ளாமல் பிற எம்ஏல்ஏகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்" என்று செந்தில் கூறினார்.