திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:28 IST)

ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் இவ்ளோதான்.. பில்டப்புக்காக ஏத்தி சொன்னோம்! – செல்வராகவன் ட்வீட்!

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட்டை வேண்டுமென்றே அதிகமாக கூறியதாக செல்வராகவன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2010ல் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியில் தோல்வியடைந்த படமாகவே கருதப்பட்டது.

இந்நிலையில் இந்த பட பட்ஜெட் குறித்து பதிவிட்டுள்ள செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடிதான். ஆனால் இது ஒரு மெகா பட்ஜெட் படம் என மக்களிடம் காட்டுவதற்காக ரூ.32 கோடி பட்ஜெட் என அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும் அது சராசரி படமாக கருதப்பட்டது. எதுவாயினும் பொய் சொல்லக்கூடாது என கற்றுக் கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.