7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் முட்டிக்கொண்ட இயக்குனரும் நடிகரும்..!
2004 ஆம் வெளியான 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தனர் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.
இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற ஒப்பந்தம் ஆகினர். சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் செல்வராகவன் ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கப்பட்டது. பைனான்ஸ் காரணமாக படம் விட்டு விட்டு ஷூட்டிங் நடந்தது.
ஆனால் இப்போது செல்வராகவன் அந்த படத்தை விட்டுவிட்டு மெண்டல் மனதில் படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஷூட்டிங்கின் போது செல்வராகவனுக்கும் ஹீரோ ரவி கிருஷ்ணாவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு எழுந்து முட்டல் மோதல் அதிகமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு செல்வராகவன் அடுத்த படத்துக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.