வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (14:21 IST)

13 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜிவி பிரகாஷ்.. மாஸ் அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் செல்வராகவன் பெரும்பாலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால், அவரது இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இரண்டு படங்களில் மட்டும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
 
இப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு, செல்வராகவன் மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் புதிய திட்டத்தில் இணைந்து பணியாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ போன்ற படங்களில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆனால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘மயக்கம் என்ன’ ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இந்த படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
 
தற்போது 13 ஆண்டுகள் கழித்து, செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில், "புதிய ஸ்கிரிப் மற்றும் புதிய புரொஜக்ட். செல்வராகவன் அவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. ஒரு புதிய பயணம் காத்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் ஜிவி பிரகாஷ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran