1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (18:03 IST)

கமலையும் சூர்யாவையும் மறைமுகமாக திட்டிய சீனுராமசாமி..?

இயக்குனர் சீனுராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
2013ம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய படம் ‘இடம் பொருள் ஏவல்’. அப்போது லிங்குசாமி அதிக பட்ஜெட்டில் சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்தது. அதேபோல், அவரின் மற்றொரு தயாரிப்பான கமல் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படமும் படுதோல்வி அடைந்தது.
 
இதன் காரணமாக, கடனாளியானார் லிங்குசாமி. எனவே, இடம் பொருள் ஏவல் படத்தை அவரால் திரைக்கு கொண்டு வர முடியாமல் போனது. அப்படம் மட்டுமல்ல பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ரா.ரா.ராஜசேகர், பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒருபடம், ரஜினிமுருகன் ஆகிய படங்கள் முடங்கியது. இதில் ரஜினிமுருகன் மட்டும் ஒருவழியாக வெளியாகி வெற்றி பெற்றது. மற்ற படங்கள் வெளியாகவில்லை.
 
அதன்பின் தன்னுடைய இயக்குனர் சீனுராமசாமிக்கு விஜய் சேதுபதி மீண்டும் கால்ஷீட் கொடுத்து உருவான படம்தான் தர்மதுரை. அப்படம் வெற்றியடைந்தது.
 
இந்நிலையில், டிவிட்டரில் சீனுராமசாமியிடம் ஒரு நபர் “ இடம் பொருள் ஏவல்” படத்தை சீக்கிரம் வெளியிடுங்கள். நாங்கள் வெகுநாட்களாக காத்திருக்கிறோம் என கூறியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்துள்ள சீனுராமசாமி “இடம் பொருள் ஏவல் படம் வெளியே வர வேண்டுமென்றால் 'உத்தமவில்லன்' திரு,கமல் அய்யாவும் அஞ்சான் திரு,சூர்யாவும் மனது வைத்தால் ஒருவேளை வெளிவரலாம்..” என கூறியுள்ளார்.
 
இவர்கள் இருவரால்தான் தன்னுடைய படம் வெளியாகாமல் போனது என அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.