வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 27 மே 2017 (18:18 IST)

திரைக்கதையை மாற்றிய இயக்குநர்; படத்திற்காக அட்ஜெஸ்ட் செய்த நயன்தாரா

அறிமுக இயக்குனர் மீஞ்சூர் கோபி நயினார் இயக்கியுள்ள படம் 'அறம்'. இதில் நயன்தாரா மாவட்ட ஆட்சியாளராக நடித்து  இருக்கிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவின் டோரா படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அறம் ரிலீஸுக்கு தயாராக உள்ள படம். இவரது நடிப்பில் அடுத்தடுத்து நிறைய  படங்கள் வெளியாக இருக்கிறது.


 
 
இந்த நிலையில் படத்தை பற்றி இயக்குனர் கோபிநயினார் பேசும்போது, நான் எழுதிய திரைக்கதைப்படி நயன்தாரா 20 நிமிடம்  கழித்து தான் அறிமுகமாவார். ஆனால் நயன்தாரா தான் இப்படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் நான் திரைக்கதையை மாற்ற  முடிவு செய்தேன். ஆனால் நயன்தாரா தான் முதலில் இருந்தபடியே இருக்கட்டும், அதுதான் படத்திற்கு சரியாக இருக்கும் என்று  கூறியதாக இயக்குனர் கூறியுள்ளார்.
 
நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள இந்தப் படத்தை கோபி இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களின் படங்கள் மோசமாக  இருந்தாலும் பார்க்க ஆள் இருக்கதான் செய்கிறார்கள்.