செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2017 (17:03 IST)

ஜெயம் ரவியை நினைத்து உருகும் சாயிஷா

ஜெயம் ரவி மாதிரி ஒரு ஹீரோ கிடைப்பது வரம் என நடிகை சாயிஷா சைகல் தெரிவித்துள்ளார்.


 

 
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா சைகல். முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. அவரது நடனத்தை பற்றி விஷாலும் பெருமையாக கூறி இருந்தார்.
 
தமிழ் முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பாடல்களில் புயல் போல் ஆடி இருந்தார். தமிழ் சினிமாவில் தனது முதல் பட அனுபவம் குறித்து பேசியவர் கூறியதாவது:-
 
நான் மும்பை பெண்ணாக இருந்தாலும் தமிழ் படம் மூலம் நடிகையாக அறிமுகமாக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. தெலுங்கு படத்தில் தான் முதலில் நடித்தேன். புதிதாக கோலிவுட் வரும் ஹீரோயின்களுக்கு ஜெயம் ரவி போன்று ஒரு ஹீரோ கிடைத்தால் அது மிகப் பெரிய வரம் என்பேன் என்றார்.