என் படங்களை நானே திரையரங்கில் பார்ப்பதில்லை.. சத்யராஜ் பகிர்ந்த தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்காமல் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
சத்யராஜின் மகன் சிபிராஜும் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளார். அவரின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது சத்யராஜ் தான் நடித்த படங்களையே அவர் திரையரங்குகளில் பார்ப்பதில்லை எனக் கூறியுள்ளார்.
அதில் “நான் என்னுடைய பல படங்களை திரையரங்குகளில் போய்ப் பார்த்ததில்லை. என்னுடைய சூப்பர் ஹிட் படங்களான அமைதிப்படை மற்றும் வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்களை எல்லாம் நான் தியேட்டரில் நான் பார்த்ததில்லை. எனக்கு அந்த டென்ஷன் எப்போதும் இல்லை” எனக் கூறியுள்ளார்.