1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (16:43 IST)

விக்ரம்பிரபுவின் துணிச்சலான முடிவு

விக்ரம்பிரபு எடுத்த துணிச்சலான முடிவைக் கண்டு சினிமா உலகத்தினர் ஆச்சர்யப்படுகின்றனர்.


 

பொதுவாக, ஒரு படத்தில் கதாநாயகன் இறந்ததுபோல் காட்டினால், ரசிகர்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி காட்டினால், அந்தப் படம் தோல்வி தான். எனவே, அந்தக் காலத்தில் இருந்தே அப்படிக் காட்டுவதைத் தவிர்த்து வந்தனர்.

ஆனால். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்ரியன்’ படத்தில், நாயகன் விக்ரம்பிரபு இறந்ததுபோல் காட்டியிருக்கிறார்களாம். தங்களுடன் மோதும் விக்ரம்பிரபுவை, வில்லன்கள் கொன்றுவிடுவது போல் காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம். அவருடைய துணிச்சலான முடிவைக் கண்டு, படம் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில், மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். கவின் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும், இரண்டாவது ஹீரோ – ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சரத் லோகிதாஸ்வா, அருள்தாஸ், போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.