1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 9 மே 2017 (14:50 IST)

சந்தானம் என்னை கை விட்டார்; சூரி கை கொடுத்தார் - நடிகை ஓபன் டாக்

சந்தானம் தன்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டதாக நடிகை மதுமிதா கவலையுடன் தெரிவித்துள்ளார்.


 

 
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் மதுமிதா. சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என இவரைத்தான் படத்தில் கொஞ்சுவார். அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மதுமிதா.
 
தற்போது காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் மதுமிதா, சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் சூரியுடன் நடித்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் சேர்த்து நடித்ததால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டார். அதன்பிறகு சந்தானத்துடன் தொடர்பில் இல்லை. அவரின் செல்போன் எண் கூட எனக்கு தெரியாது. பிறகு அவர் என்னை கண்டுக்கொள்ளாமல் கைவிட்டுவிட்டார்.
 
சந்தானம் கைவிட்டாலும் சூரி எனக்கு கை கொடுத்து உதவி வருகிறார். தற்போது சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் அவருடன் நடித்துள்ளேன், என்றார்.